பிஎஸ் 3 தடை நீக்கம் : டிராக்டர் மற்றும் கட்டுமான வாகனங்களுக்கு மட்டுமே..!

பிஎஸ் 3 எனப்படும் பாரத் ஸ்டேஜ் மாசு விதிகளுக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் கட்டுமான பயன்பாட்டில் ஈடுபடுத்தப்படுகின்ற வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிஎஸ் 3 தடை நீக்கம்

பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட நடைமுறையானது வர்த்தக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் ஆனால் விவாசாய வாகனங்கள் மற்றும் கட்டுமான வாகனங்களுக்கு பெருந்தாது என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தவறுதலாக விவசாய வாகனங்கள் மற்றும் கட்டுமான வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆர்டிஓ அலுவலகங்கள் அனுமதி மறுத்ததை தொடர்ந்தே உச்சநீதி மன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிஎஸ் 4 நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பி.எஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய அதிரடியாக தடை விதித்ததை தொடர்ந்து மார்ச் 30, 31 என இருநாட்களில் எண்ணற்ற சலுகைகளை மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் வாரி வழங்கியதை தொடர்ந்து அதிகப்படியான இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், வர்த்தக ரீதியான வாகனங்கள் பெரும்பாலும் இருப்பிலே இருந்த நிலையில் இவற்றை பிஎஸ் 4 முறைக்கு அதிகப்படியான செலவு மற்றும் சாத்தியமில்லை என உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, பிஎஸ் 3 எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ள விவசாய பயன்பாடு சார்ந்த டிராக்டர், கதிரடிக்கும் இயந்திரம் உள்பட கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பதிவு செய்ய உச்சநீதி மன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை.

தவறுதலாக புரிந்து செயல்பட்டதின் விளைவாக மார்ச் முதல் ஏப்ரல் 2017 வரையிலான காலகட்டத்தில் தோராயமாக விற்பனை செய்யப்பட்ட 35,760 வாகனங்களில் 25,000க்கு மேற்பட்ட வாகனங்கள் தமிழ்நாடு,ஆந்திரா , டெல்லி , தெலுங்கானா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக வெளிவந்த தகவலை தொடர்ந்தே உச்சநீதி மன்றம் புதிய உத்தரவை வழங்கியுள்ளது.

பி.எஸ் 3 தடை குறிப்புகள்
Exit mobile version