பெட்ரோல், டீசல் விலை உயர்வு

15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகின்ற பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ரூ.1.39 காசும் , டீசல் விலை ரூ. 1.04 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு 1

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 39 காசும் டீசல், லிட்டருக்கு ஒரு ரூபாய் 4 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு விளக்கமளித்துள்ள எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளன.  . இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் 16/04/2017 முதல் அமலுக்கு வந்துள்ளது. உயர்த்தப்பட்ட விலை உயர்வை தொடர்ந்து, சென்னையில் 69 ரூபாய் 28 காசாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தற்போது 71 ரூபாய் 16 காசாக அதிகரித்துள்ளது.

58 ரூபாய் 82 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசல், தற்போது 60 ரூபாய் 16 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Recommended For You

About the Author: Rayadurai