மஹிந்திரா ஏர்வேன்10 டர்போப்ராப் விமானம் விரைவில்..!

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் மஹிந்திரா ஏர்வேன்10 டர்போப்ராப் விமானத்துக்கு பறக்கும் அனுமதியை ஆஸ்திரேலிய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் வழங்கியுள்ளது. மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஏர்வேன்10 பாரீஸ் ஏர் ஷோ 2017 அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மஹிந்திரா ஏர்வேன்10

மஹிந்திரா குழுமத்தின் விமான துறை சார்ந்த சேவைகளில் ஒன்றான மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய 10 இருக்கை கொண்ட டர்போப்ராப் விமானத்துக்கு அமெரிக்காவின் பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகத்தின் FAR 23 வகை அனுமதியை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் பறக்கும் அனுமதியை பெற்றுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் M250 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள ஏர்வேன்10 டர்போ ப்ராப் மாடல் அதிகபட்சமாக 450SHP (450-shaft horsepower) பவரை வெளிப்படுத்தும்.  இந்த விமானம் வருகின்ற ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை நடைபெற உள்ள பாரீஸ் ஏர் ஷோ 2017 அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த  டர்போப்ராப் விமான அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இந்தியா,அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதற்கட்டமாக வெளியிடப்பட உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் பங்களிப்பாக செயல்படுத்தப்பட்டுள்ள மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஏர்வேன் 8 மாடலை தொடர்ந்து ஏர்வேன் 10 மாடலும் வெளியாக உள்ளது.

Exit mobile version