மாருதி டிசையர் கார் விற்பனையில் சாதனை

இந்திய செடான் சந்தையின் மிக விருப்பமான மாருதி சுசூகி டிசையர் கார் 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மாருதி டிசையர் கார் 2008ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ளது.

மாருதி டிசையர் கார்
மாருதி டிசையர் கார் 

கடந்த 2008ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த மாருதி சுசூகி ஸ்விப்ட் டிசையர் கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் மூன்றிடங்களில் விற்பனையில் முன்னனி வகித்து வருகின்றது.

2012ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை டிசையர் விற்பனைக்கு வந்தது. அதனை தொடர்ந்து நல்ல விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்றது.

அதன் பின்பு மேம்படுத்தப்பட்ட டீசல் மைலேஜ் மாடலாக லிட்டருக்கு 26.59 கிமீ தரவல்ல மாடல் பிப்ரவரி 2015யில் விற்பனைக்கு வந்தது. ஸ்விஃப்ட் டிசையர் டாக்சி சந்தையிலும் டிசையர் டூர் என்ற பெயரில் விற்பனை செயப்படுகின்றது.

இது குறித்து மாருதி விற்பனை செயல் அதிகாரி கூறுகையில் , டிசையர் சிறப்பான தோற்றத்துடன் , நவீன வசதிகளுடன் , சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை தருவதனால் மிக கடினமான சந்தையிலும் நன்மதிப்பினை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாருதி சுசூகி மாடல்களில் 10 லட்சத்தினை கடந்த 6வது மாடலாக டிசையர் இணைந்துள்ளது. இதற்க்கு முன்பு மாருதி 800 (26.3 லட்சம்), ஆல்டோ (28.3 லட்சம்) , ஆம்னி (16.8 லட்சம்) , வேகன்ஆர் (16.3 லட்சம்) மற்றும் ஸ்விப்ட் (13.6 லட்சம்)

Maruti Dzire crosses 10 lakh units sales

Recommended For You