யமஹாவை வீழ்த்தி ராயல் என்ஃபீல்டு 5வது இடத்தில்

0

முதன்முறையாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2015-2016 ஆம் நிதி ஆண்டில் 4,98,671 மோட்டார்சைக்கிள்களை ராய் என்ஃபீல்டு விற்பனை செய்துள்ளது.

ராயல் என்பீல்டு

கடந்த நிதி ஆண்டின் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் விபனை வளர்ச்சி மிக சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. 2015-2016 ஆம் நிதிஆண்டில் ராயல் என்ஃபீல்டு 53.92 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆனால் இதே காலத்தில் யமஹா (3,32,958) 4.4 % சரிவினை பெற்றுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட செயல்படும் பிரசத்தி பெற்ற என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் தயாரிப்பில் மிகவும் பிரபலமான இந்திய நிறுவனமாகும். இந்திய மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாகவே பல வெளிநாடிகளிலும் தன்னுடைய பைக்குகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

மேலும் படிங்க ; ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் விபரம்

கிளாசிக் தோற்றம் , முரட்டுதனமான கம்பீரம் போன்றவற்றை பெற்ற என்பீலடு பைக்குகளின் விற்பனை கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து 50 % வளர்ச்சி விகிதத்தினை பதிவு செய்து வருகின்றது. கிளாசிக் , புல்லட் , தன்டர்பேர்டு , எலக்ட்ரா மற்றும் புதிய வரவான ஹிமாலயன் போன்ற மாடல்கள் விற்பனையில் உள்ளன.

Royal-Enfield-Himalayan-tourer