யுட்டிலிட்டி வாகன சந்தை நிலவரம்- மே 2015

எஸ்யூவி , எம்பிவி மற்றும் எம்யூவி வாகன சந்தையில் மஹிந்திரா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது . பொலிரோ ,ஸ்கார்பியோ , எக்ஸ்யூவி500 நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. ரெனோ டஸ்ட்டர் சரிவினை சந்தித்துள்ளது.

மஹிந்திரா பொலிரோ
மஹிந்திரா பொலிரோ
ஊரக சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்கும் மஹிந்திரா பொலிரோ கடந்த மே மாதத்தில் 7569 வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.
மாருதி எர்டிகா எம்பிவி இரண்டாம் இடத்தில் உள்ளது. டொயோட்டா இன்னோவா தொடர்ந்த மாதம் 5000த்திற்க்கு மேற்பட்ட கார்களை விற்பனை செய்து வருகின்றது.
யுட்டிலிட்டி வாகன சந்தை நிலவரம் மே 2015
யுட்டிலிட்டி வாகன சந்தை நிலவரம் மே 2015
மஹிந்திரா முதல் 10 இடங்களில் 4 இடங்களை கைபற்றியுள்ளது. ரெனோ டஸ்ட்டர் மிக பெரும் சரிவினை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மே 2014யில் 3327 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன ஆனால் கடந்த மே மாதத்தில் 1429 மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ லாட்ஜி 1947 விற்பனை ஆகியுள்ளது.
Top 10 selling utility vehicles in May 2015

Recommended For You

About the Author: Rayadurai