விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2016

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சி சிறப்பான முறையில் வளர்ந்து வருகின்ற நிலையில் கடந்து போன 2016 ஜூன் மாத விற்பனையில் முன்னனி வகித்த டாப் 10 கார்கள் பற்றி  தெரிந்து கொள்ளலாம். இன்னோவா க்ரிஸ்ட்டா பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.

ரெனோ க்விட் கார்

டாப் 10 பட்டியலில் தொடர்ச்சியாக பல மாதங்களாகவே மாருதி சுசூகி நிறுவனத்தின் 4 கார்கள் முதலிடத்தினை பிடிப்பது வழக்கமாக இருந்துவந்த நிலையில் தற்பொழுது பட்டியில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

மிகப்பெரிய வீழ்ச்சியை நோக்கி மாருதி ஆல்ட்டோ பயணித்து வருகின்றது. மாதந்தோறும்தொடர்ச்சியாக 20,000 கார்களுக்கு மேலாக விற்பனை ஆகி வந்த நிலையில் தற்பொழுது ஜூன் 2016யில் 15,750 கார்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. மேலும் மாருதி ஸ்விஃப்ட் காரும் 10,000 கார்களுக்கு குறைவாகவே 9,033 கார்களை விற்பனை செய்து பட்டியலில் 6வது இடத்தினை பெற்றுள்ளது. மாருதி நிறுவனத்தின் பராமரிப்பு பணிகளின் காரணமாக உற்பத்தி இழப்பினை பெற்றிருக்கலாம். ஆனாலும் மாருதி தொடக்கநிலை கார் சந்தையில் சரிவினை சந்திக்க தொடங்கியுள்ளது.

மிகப்பெரிய வளர்ச்சியாக இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ரெனோ க்விட் கார்களின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. ஜூலை மாத விற்பனையில் 10,000 இலக்கினை ரெனோ க்விட் கார் கடக்கலாம் மேலும் சமீபத்தில் வெளிவந்த செய்தியின் வாயிலாக ரெனோ க்விட் 1.50 லட்சம் முன்பதிவுகளை பெற்றுள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2016

வ.எண்  கார் மாடல் விபரம்ஜூன் -2016
1மாருதி சுஸூகி ஆல்ட்டோ15,750
2 மாருதி சுஸூகி டிசையர்15,560
3ஹூண்டாய் கிராண்ட் ஐ1012,678
4மாருதி சுஸூகி வேகன்ஆர்11,962
5 ரெனோ க்விட்9,459
6மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்9,033
7ஹூண்டாய் எலைட் ஐ208.990
8டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா8,171
9ஹூண்டாய் க்ரெட்டா7,700
10மாருதி சுஸூகி பலேனோ6,967

toyota-innova-crysta

Recommended For You