விற்பனையில் டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2016

கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் பயணிகள் கார் விற்பனையில் அதிகம் விற்பனையான கார்களில் டாப் 10 கார்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. ரெனோ க்விட் முதன்முறையாக 10,000 கார்களை மாத விற்பனையில் பதிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 2016ல் மொத்தமாக 2.55 லட்சம் கார்களுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது. தொடக்க நிலை சந்தையில் அமோக வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்கும் க்விட் கார் முதல் 10 இடங்களில் 6வது இடத்தினை பிடித்து 10,719 கார்களை விற்பனை செய்துள்ளது. முதலிடத்தில் க்விட் போட்டியாளரான ஆல்ட்டோ கார் 20,919 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது.

முதல் 10 இடங்களை பிடித்துள்ள பட்டியலில் 7 இடங்களை மாருதி சுசூகி பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் எலைட் ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 கார்களும் பட்டியலில் உள்ளது. எலைட் ஐ20 காரின் நேரடியான போட்டியாளராக பலேனோ கார் விளங்குகின்றது. கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களும் சீரான விற்பனையை பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க ; ஆகஸ்ட் 2016 மாத கார் விற்பனை நிலவரம்

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2016

வ.எண்   கார் மாடல் விபரம் ஆகஸ்ட் -2016
1. மாருதி சுஸூகி ஆல்ட்டோ 20,919
2.  மாருதி சுஸூகி டிசையர் 15,766
3. மாருதி சுஸூகி வேகன்ஆர் 14,571
4. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 13,027
5.  ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,957
6. ரெனோ க்விட் 10,719
7. ஹூண்டாய் எலைட் ஐ20 9,146
8. மாருதி சுஸூகி பலேனோ 8,671
9. மாருதி சுஸூகி செலிரியோ 8,063
10. மாருதி சுஸூகி சியாஸ் 6,124