விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017 (ஹேட்ச்பேக்)

0

கடந்த ஜனவரி 2017யில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் அதிக எண்ணிகையை பதிவு செய்த முதல் 10 கார்களை ஹேட்ச்பேக் பிரிவில் காணலாம். மாருதி சுஸூகி நிறுவனமே இந்த பிரிவினை அதிக அளவில் கையாளுகின்றது.

renaultkwidfr

ஹேட்ச்பேக் கார்கள்

மாருதியின்  ஆல்ட்டோ 22,998 கார்கள் விற்பனை ஆகி பட்டியலில் முதலிடதத்தை பிடித்துள்ளது. மாருதியின் மற்ற கார்களான வேகன்ஆர் , ஸ்விஃப்ட் , பலேனோ மற்றும் செலிரியோ போன்ற கார்களும் உள்ளன.

நாட்டின் இரண்டாவது பெரிய தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 மற்றும் இயான் கார்களும் உள்ளது. மிக வேகமாக விற்பனையில் வளர்ந்து வரும் ரெனோ க்விட் மற்றும் டாடா டியாகோ கார்களும் உள்ளன.

2017 hyundai grand i10 launched

முழுமையான விபரத்தை கீழுள்ள அட்டவணையில் காணலாம்…

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017 (ஹேட்ச்பேக்)

வ.எண்  மாடல் விபரம் (automobiletamilan)  ஜனவரி 2017
1. மாருதி சுஸூகி ஆல்ட்டோ 22,998
2.  மாருதி சுஸூகி வேகன்ஆர் 14,930
3. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 14,545
4. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 13,010
5. ஹூண்டாய் எலைட் ஐ20 11,460
6. மாருதி சுஸூகி செலிரியோ 10,879
7. மாருதி சுஸூகி பலேனோ 10,476
8. ரெனோ க்விட் 6,924
9. டாடா டியாகோ 5,399
10. ஹூண்டாய் இயான் 5,047

விற்பனை தொடர்பான மேலதிக செய்திகளை வாசிக்க – ஆட்டோமொபைல் வணிகம்