விற்பனையில் டாப் 10 கார்கள் – மே 2016

0

கடந்த மே மாதத்தில் கார் விற்பனையில் முன்னிலை வகித்த டாப் 10 கார்களின் விற்பனை எண்ணிக்கை மற்றும் கார் மாடல்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவின் நெ.1 எம்பிவி காரான இன்னோவா க்ரிஸ்ட்டா 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

toyota-innova-crysta-fr

Google News

விட்டாரா பிரெஸ்ஸா , பலேனோ போன்ற மாடல்கள் மாருதி சுஸூகி நிறுவனத்துக்கு புதிய வலுவினை சேர்க்கும் வகையில் அறிமுகம் முதலே சிறப்பான விற்பனை எண்ணிக்கையை எட்டி வருகின்றது. குறிப்பாக விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் முன்னிலை வகிக்கின்றது. ஹூண்டாய் க்ரெட்டா கார் பட்டியலில் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

எர்டிகா காரிடம் எம்பிவி பிரிவில் முதலிடத்தினை சில மாதமாக இழந்திருந்த இன்னோவா காரின் புதிய மேம்படுத்தப்பட்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை மற்றும் முன்பதிவு அமோகமாக உள்ளது. டெல்லியில் 2000சிசி க்கு மேற்பட்ட டீசல் காருக்கு தடை இருந்தாலும் இன்னோவா விற்பனையில் சரிவினை கானவில்லை. மே மாதம் 7,259 இன்னோவா கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிமியம் ஹேட்ச்பேக் மாடல்களான பலேனோ மற்றும் எலைட் ஐ20 என இரு மாடல்களுக்கு இடையே கடுமையான போட்டி கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வரும் நிலையில் பலேனோ காரை விட 1535 கார்கள் குறைவாக விற்பனையாகி 7வது இடத்தினை எலைட் ஐ20 பெற்றுள்ளது.

maruti-vitara-brezza

பிரசத்தி பெற்ற ரெனோ க்விட்  முதல் 10 கார்கள் பட்டியலில் இருந்து வெளியேறி வெறும் 5,600 கார்கள் மட்டுமே டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.  ரெனோ நிறுவனத்தின் பராமரிப்பு பணியின் காரணமாக குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்திருக்கலாம. வழக்கம்போல மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோ , டிசையர் ,வேகன்ஆர் ,ஸ்விப்ட் , செலிரியோ கார்கள் இடம்பெற்றுள்ளன.

விற்பனையில் டாப் 10 கார்கள் – மே 2016

வ.எண்                     கார் மாடல் விபரம்  மே -2016
1         மாருதி சுஸூகி ஆல்ட்டோ   19,874
2         மாருதி சுஸூகி டிசையர்   16,968
3         மாருதி சுஸூகி வேகன்ஆர்   13,231
4          மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்   12,355
5         ஹூண்டாய் கிராண்ட் ஐ10    12,055
6          மாருதி சுஸூகி பலேனோ    10,004
7         ஹூண்டாய் எலைட் ஐ20    8,469
8          மாருதி சுஸூகி செலிரியோ    7,379
9     டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா    7,259
10      மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா     7,193