விற்பனையில் டாப் 10 பைக்குகள் – நவம்பர் 2016

கடந்த நவம்பர் 2016யில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பைக்குகளில் அதிகம் விற்பனை ஆகி முதல் 10 இடங்களை பிடித்த பைக்குகள் பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல ஹீரோ ஸ்பிளென்டர் முதல் இடத்தை பெற்றுள்ளது.

உலகின் முன்னனி பைக் தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த நவம்பர் 2016யில் 2,01,100 ஸ்பிளென்டர் பைக்குகளை விற்பனை செய்து முதலிடத்தை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோ நிறுவனத்தின் HF டீலக்ஸ் மற்றும் கிளாமர் பைக்குகள் உள்ளன.

மேலும் படிக்க ; விற்பனையில் முதல் 10 ஸ்கூட்டர்கள் – நவம்பர் 2016

ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் விற்பனை சரிவினை சந்தித்து வருகின்ற நிலையில் 45,236 பைக்குகளை விற்பனை செய்து 4வது இடத்தை பெற்றுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 150 , பிளாட்டினா , சிடி100 மாடல்களும் பட்டியலில் உள்ளது.

மேலும் 10வது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி மாடல்களும் 7வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளும் இடம்பிடித்துள்ளது.

டாப் 10 பைக்குகள் – நவம்பர் 2016

வ.எண் பைக் மாடல் விபரம்  நவம்பர் 2016
1.     ஹீரோ ஸ்பிளென்டர்  2,01,100
2.  ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ்  1,10,515
3.  ஹீரோ கிளாமர் 53,301
4. ஹோண்டா சிபி ஷைன்  45,236
5.  பஜாஜ் பிளாட்டினா  42,395
6. ஹீரோ பேஸன்  40,272
7. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350  35,809
8.  பஜாஜ் பல்சர் 150  32,788
9.  பஜாஜ் சிடி100  21,565
10.   டிவிஎஸ் அப்பாச்சி  21,449

Exit mobile version