Home Auto Industry

ஹூண்டாய் 4 மில்லியன் கார் விற்பனை சாதனை

இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளில் 4 மில்லியன் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. சான்ட்ரோ கார் மூலம் இந்திய சந்தையில் நுழைந்த ஹூண்டாய் விற்பனையில் இரண்டாமிடத்தில் உள்ளது.
க்ரெட்டா

சென்னை அருகே அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் இயான் கிரான்ட் ஐ10 , எலைட் ஐ20 , ஐ20 ஏக்டிவ் , எக்ஸ்சென்ட் , வெர்னா , எலன்ட்ரா , க்ரெட்டா , சான்டா ஃபீ போன்ற கார் மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஃப்ளூடியிக் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்படும் ஹூண்டாய் கார்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. புதிதாக விற்பனைக்கு வந்த க்ரெட்டா எஸ்யூவி 70000 முன்பதிவுகளை கடந்துள்ளது.

40 லட்சம் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதை குறித்து ஹூண்டாய் இந்திய தலைவர் YK KOO கூறுகையில் இயான் முதல் சான்டா ஃபீ வரை 10 கார்களும் மிக சிறப்பான மாடலாக இந்திய சந்தையில் உள்ளது. ஹூண்டாய் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் மற்றும் பிரிமியம் கார் தயாரிப்பாளர் ஆகும். வரும் காலத்தில் வளர்ச்சிக்கு ஏற்ப சிறப்பான மாடல்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு தர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எலைட் ஐ 20 விற்பனை சாதனை

இந்தியாவில் விற்பனையாகும் சிறப்பான பிரிமியம் ஹேட்ச்பேக் காரான ஹூண்டாய் எலைட் ஐ20 1,50,000 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
2015ம் வருடத்தின் சிறந்த கார் என்ற விருதினை பெற்றுள்ள எலைட் ஐ20 கடந்த 15 மாதங்களில் 66 % பிரிமியம் ஹேட்ச்பேக் சந்தையை பெற்றுள்ளது.
ஹூண்டாய் இந்திய பிரிவு விற்பனை தலைவர் ராக்கேஷ் ஶ்ரீவத்ஸாவா தெரிவிக்கையில் எதிர்பார்க்காத வகையில் மிக சிறப்பான வரவேற்பினை இந்திய வாடிக்கையாளர்கள் எலைட் ஐ20 காருக்கு தந்துள்ளனர். சிறந்த காராக தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் , சேனல் பார்டனர் மற்றும் ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

Hyundai achieves 4 Million Domestic Sales in India

Exit mobile version