Automobile Tamil

ஹோண்டா ஸ்கூட்டரை வீழ்த்துமா ஹீரோ

கடந்த 14 வருடங்களுக்கு மேலாக இந்திய சந்தையில் சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி வரும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக பல வழிகளில் கடுமையான சவால் ஏற்பட்டுள்ள நிலையில் ஹீரோ நிறுவனமும் மிகுந்த சவாலினை ஏற்படுத்தியுள்ளது.

hero-duet-mastero-edge

சமீபத்தில் ஹீரோ நிறுவனத்தின் தேசிய  விற்பனை பிரிவு தலைவர் சீனிவாசு வணிகப் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கடந்த மூன்று மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் ஸ்கூட்டர் விற்பனை 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹீரோ நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு ஸ்கூட்டர்களான மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் போன்றவை சந்தையில் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. மோட்டார்சைக்கிள் உற்பத்தில் ஹீரோ முன்னிலை வகிப்பது போல ஸ்கூட்டர் உற்பத்தியிலும் முன்னிலை வகிக்க ஹீரோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மெட்டல் பாடியுடன் வந்துள்ள டூயட் ஸ்கூட்டர் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் போன்றவற்றில் டூயட் ஸ்கூட்டரில் 8.3 PS 110.9சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 8.30 Nm ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வரிசை மாதம் சராசரியாக 1.75 லட்சம் ஸ்கூட்டர்களுக்கு மேல் விற்பனை ஆகி வருகின்றது.ஒட்டுமொத்த ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா நிறுவனம் 55 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக அமைந்துள்ள டூயட் , மேஸ்ட்ரோ எட்ஜ் ,  ஜூபிடர் ,  ரே , போன்றவற்றின் பங்களிப்பும் நாளுக்கு தாள் அதிகரித்து வருகின்றது.

குஜராத் மாநிலத்தில் உள்ள விதாலாபூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலையை நேற்று ஹோண்டா திறந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 58 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை ஹோண்டா நிறுவனம் எட்டவுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் மோட்டார்சைக்கிள் விற்பனையை விட ஸ்கூட்டர் விற்பனையின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version