அவென்ஜர் பைக் விற்பனை அமோகம்

பஜாஜ் அவென்ஜர் பைக் விற்பனைக்கு வந்த ஒரே மாதத்தில் 25,000 அவென்ஜர் பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது. பஜாஜ் அவென்ஜர் 150 பைக் விற்பனையில் 40 % பங்கினை பெற்றுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் பைக்
பஜாஜ் அவென்ஜர் பைக் 220 க்ரூஸ்

தொடக்கநிலை க்ரூஸர் ரக அவென்ஜர் பைக்குகள் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் மற்றும் மூன்று வேரியண்டில் சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக்கின் விலை ரூ.75,000 மற்றும் ஸ்டீரிட் 220 மற்றும் க்ரூஸ் 220 பைக்குகள் விலை ரூ.84,000 ஆகும்.

பல்சர் 150 பைக்கில் உள்ள அதே என்ஜின் 150சிசி 14.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவென்ஜர் 220 ரேஞ்ஜ் பைக்கில் முந்தைய 19 பிஎஸ் ஆற்றலை தரும் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய பைக்குகள் மிக நேரத்தியான ஸ்டைலிங் ஆப்ஷனை மட்டுமே மாற்றம் செய்திருந்தது.

சராசரியாக 9000 பைக்குகள் விற்பனை ஆகி வந்த நிலையில் தற்பொழு து ஒரே மாதத்தில் 25,000 விற்பனை ஆகியுள்ளது. இவற்றில் 150 என்ட்ரி குரூஸர் 40 சதவீதம் அதாவது 10,000 பைக்குகள் வரை விற்பனை ஆகியுள்ளது.

மேலும் படிக்க ; பஜாஜ் அவென்ஜர் பைக்

வரும் 2016 ஆம் ஆண்டில் பஜாஜ் நிறுவனம் பல்சர் வரிசையில் 400 சிஎஸ் பைக்கினை இணைக்க உள்ளது.

Exit mobile version