டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகளுக்கான கார் விற்பனையில் மிக பெரிய விழ்ச்சியை சந்தித்து வருகின்றது. விற்பனை சரிவினை தொடர்ந்த பல்வேறு விதமான விலை குறைப்பு சலுகைகள் என வாரி வழங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே டாடா நானோ விற்பனை மிகவும் குறைந்து போனது. இதனால் குஜாரத் ஆலையில் உற்பத்தினை 20 சதவீதமாக குறைத்துள்ளது.

விரைவில் வெளியாக உள்ள டாடா நானோவின் மேம்படுத்தப்பட்ட கார், சிஎன்ஜி மற்றும் டீசல் நானோ விற்பனையை அதிகரிக்குமா என்பதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கார்கள்

டாடா ஆர்யா எஸ்யூவி காரின் விற்பனை மிக பெரிய சரிவினை சந்தித்துள்ளது. மேலும் டாடா எம்பிவி கடந்த மாதங்களில் 4 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.  மேலும் எஸ்யூவி கார்களுக்கான வரி உயர்வு ஆர்யா காரை மிகவும் நலிவடைய வைக்கும் என்பதால் விற்பனையை அதிகரிக்க தற்பொழுது ரூ  2.5 இலட்சம் வரை சலுகை வழங்கியள்ளது.

இந்தியாவின் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தினை குறைத்து வருகின்றது. இது ஆட்டோமொபைல் வர்த்தகத்தில் கவலை அளிக்ககூடியதாக கருதப்படுகிறது. சில நாட்களுக்கு முன் வெளிவந்த பதிவில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் களமிறங்குவதனை தவிர்க்கின்றது என்ற பதிவினை படித்திருப்பிர்கள்.

இந்தியாவினை புறக்கனிக்கும் நிறுவனங்கள்