நெ.1 இடத்தை இழக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

இந்திய சந்தையின் முதன்மையான மற்றும் உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக விளங்குவரும் இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாத முடிவில் 5,91,306 அலகுகளை விற்பனை செய்துள்ளது.

 ஹீரோ மோட்டோகார்ப்

கடந்த 2016 ஏப்ரல் மாதம் 612,739 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் இதே காலகட்டத்தில் ஏப்ரல் 2017ல்  591,306 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து 3.49 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை கடந்த 2016 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடுகையில் 34 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதுடன் முதன்முறையாக ஹோண்டா இந்திய வரலாற்றில் 5.50 லட்சம் இலக்கை கடந்து ஏப்ரல் 2017ல்  578,929 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 2016 ல் 414035 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

தயாரிப்பாளர்   ஏப்ரல் 2016  ஏப்ரல் 2017  %
ஹீரோ 612739 591306 -3.49
ஹோண்டா 414035 551884 33

இரு நிறுவனங்களுக்கு இடையிலான விற்பனை வித்தியாசம் 12,377 வாகனங்கள் மட்டுமே, மேலும் கடந்த நிதி ஆண்டில் முதன்மையான இருசக்கர வாகனம் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளென்டர் ஆக்டிவா ஸ்கூட்டரிடம் இழந்தது குறிப்பிடதக்கதாகும்.

நெ,1 இடத்தை இழக்குமா ஹீரோ உங்கள் கருத்து என்ன ? பதிவு செய்யுங்கள்…

Exit mobile version