Automobile Tamil

ஹோண்டா ஆக்டிவா நெ.1 இருசக்கர வாகனம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த 6 மாதங்களில் 13,38,015 ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளது. இதே காலகட்டத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் 12,33,725 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2016-Honda-Activa-i-Candy-Jazzy-Blue

17 ஆண்டுகால முதலிடத்தை ஹீரோ ஸ்பிளென்டர் முதன்முறையாக இழந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் தொடர்ச்சியாக முதல் 10 இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து ஆக்டிவா முதலிடத்தை வகித்து வருகின்றது.

ஆக்டிவா vs ஸ்பிளென்டர் விற்பனை ஒப்பீடு பட்டியல்

2016 January February March April May June Total
Honda Activa 2,10,123 2,10,028 2,19,926 2,33,935 2,37,217 2,26,686 13,38,015
Hero Splendor 1,99,345 1,89,314 2,09,209 2,24,238 2,07,010 2,04,609 12,33,725

மொத்த இருசக்கர வாகன விற்பனையில் 15 சதவீத பங்கினை பெற்றுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டர் சந்தையில் முன்னனி வகிக்க தரமான மோட்டார்சைக்கிளாக விளங்கி வருகின்றது. போட்டியாளரான ஹீரோ ஸ்பிளென்டர் சிறப்பான போட்டியாளராக விளங்கி வந்தாலும் கடந்த 6 மாதங்களாக தொடர்ச்சியாக பின்தங்கி வந்தாலும் விற்பனையில் சரிவினை சந்திக்கவில்லை. சுமார் 1,04,290 பைக்குகள் மட்டுமே வித்தியாசத்தில் உள்ள இரு மோட்டார்சைக்கிள்களும் இந்திய சந்தையின் தவிர்க்க முடியாத மாடல்களாகும்.

ஹெச்எம்எஸ்ஐ (HMSI) விற்பனை & மார்கெட்டிங் துனை தலைவர் YS குல்கிரியா இதுபற்றி கூறுகையில் இந்திய குடும்பங்களின் மிகசிறப்பான தேர்வாக விளங்கும் ஆக்டிவா ஸ்கூட்டர் மிகசிறப்பான மைலேஜ் , தரம் மற்றும் டெக்னாலாஜி போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

போட்டியை ஈடுகொடுக்கும் வகையில் மிக சவாலான புதிய ஹீரோ ஸ்பிளென்ட் ஐஸ்மார்ட் 110 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. ஆக்டிவா வெற்றி தொடருமா ? இல்லை மீண்டும் ஹீரோ முதலிடத்தை பெறுமா ? உங்கள் கருத்துக்களை பதிவு செய்க…

Exit mobile version