Automobile Tamilan

100சிசி முதல் 125சிசி வரை ஹீரோ மோட்டோகார்ப் ஆட்சி

இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையின் தொடக்கநிலை 100சிசி முதல் 125 சிசி வரையிலான சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் மிக சிறப்பான பங்களிப்பினை பெற்று விளங்குகின்றது. ஸ்பிளென்டர் , பேஸன் , கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் முக்கிய பங்காற்றுகின்றன.

glamour

ஸ்கூட்டர் சந்தையில் வலுவான அடிதளத்தினை ஹோண்டா பெற்றிருந்தாலும் மிக வேகமாக வளர்ந்து வரும் இருசக்கர வாகன பைக் பிரிவின் தொடக்க நிலை சந்தையான 100சிசி முதல் 125 சிசி வரையிலான பைக் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் முன்னிலை வகிக்கின்றது. தொடக்க நிலை சந்தையான 100 சிசி முதல் 110சிசி வரையிலான பிரிவில் பல ஆண்டுகளாகவே  முன்னிலை வகித்து வருகின்றுது.

2016-2017 ஆம் நிதி வருடத்தின் முதல் காலாண்டின் முடிவில் 17,45,389 இருசக்கர வாகனங்களை ஹீரோ விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில்  16.45 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் 125 சிசி பிரிவில் நவம்பர் 2015யில் 46,000 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாதம் 80,000 பைக்குகளை சராசரியாக விற்பனை செய்துள்ளது. ஹீரோ கிளாமர் விற்பனை 32 சதவீதமும் , ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் விற்பனை 29 சதவீதமும் முதல் காலண்டில் அதிகரித்துள்ளது.

கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் 125சிசி பிரிவில் மாதந்திர விற்பனையில் சராசரியாக 80,000 பைக்குகள் விற்பனை ஆகி 50 சதவீத சந்தை பங்களிப்பினை கொண்டு விளங்குகின்றது.  புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 புதிய அத்தியாத்தை ஹீரோ தொடங்க வாய்ப்பாக அமையும் என நம்பலாம்.

Exit mobile version