20 மாதங்கள் , 2 லட்சம் பலேனோ கார்கள் விற்பனை..!

0

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக விளங்கும் மாருதி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை 20 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

Maruti Baleno RS concept

Google News

பலேனோ கார்கள்

மாருதியின் பிரத்யேகமான நெக்ஸா பிரிமியம் ஷோரூம் வாயிலாக விற்பனை செய்ப்படுகின்ற மிக முக்கியமான மாடலாக வலம் வருகின்ற மாருதி பலேனோ கார் கடந்த அக்டோபர் 2015 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அமோக ஆதரவினை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்ற காராக உள்ளது.

Maruti Baleno RS dashboard

மேட் இன் இந்தியா தயாரிப்பாக விளங்கும் பலேனோ கார் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் கார்கள் விற்பனை செய்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அடுத்த 12 மாதங்களுக்குள் மேலும் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து மொத்தம் 2லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவை தவிர ஜப்பான் ஐரோப்பா நாடுகள், இங்கிலாந்து. லத்தின் அமெரிக்கா மற்றும் நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு 64,000 பலேனோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Maruti Baleno RS concept rear

பலேனோ எஞ்சின்

84.3பிஎஸ் ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 115என்எம் மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 21.4கிமீ ஆகும். 75பிஎஸ் ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 190என்எம் மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும்.

சாதாரன பலேனோ மாடலை விட கூடுதலான செயல்திறன் மிக்க பலேனோ ஆர்எஸ் 100.5 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்சின் மாடலும் விற்பனை செய்யப்படுகின்றது.