விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – டிசம்பர் 2015

கடந்த டிசம்பர் 2015யில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளி மேஸ்ட்ரோ இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது.

hero-duet-mastero-edge

முதலிடத்தில் வழக்கம்போல ஹோண்டா ஆக்டிவா 1,74, 154 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. வருடத்தின் இறுதி மாதம் என்பதனால் விற்பனை சரிந்திரிருந்தாலும் ஹீரோ நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் போன்ற ஸ்கூட்டர்கள் 52,084 விற்பனை ஆகி இரண்டாமிடத்தில் உள்ளது. ஜூபிடர் ஸ்கூட்டர் 47,217 விற்பனை ஆகி 3வது இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஹீரோ டூயட் , பிளஸ்சர் போன்றவை இடம் பிடித்துள்ளது.

யமஹாவின் ஃபேசினோ ஸ்கூட்டர் 14,437 விற்பனை ஆகியுள்ளது. மஹிந்திராவின் கஸ்ட்டோ ஸ்கூட்டர் டாப் 10 இடங்களில் இருந்து வெளியேறியுள்ளது. 10வது இடத்தில் மீண்டும் வீகோ நுழைந்துள்ளது.

top-10-scooter-sales-december-2015

Recommended For You