Automobile Tamil

ரூ. 2000 கோடி முதலீட்டில் களமிறங்கும் எம்ஜி மோட்டார் : குஜராத்

இந்தியாவில் முதல் சீன ஆட்டோமொபைல் குழுமத்தின் நிறுவனமாக களமிறங்க உள்ள எம்ஜி மோட்டார் குஜராத் மாநிலத்தில் ரூ. 2000 கோடி வரையிலான முதலீட்டை மேற்கொள்வதுடன் ஜிஎம் தொழிற்சாலையை கையகப்படுத்த உள்ளது.

எம்ஜி கார்கள்

வரும் 2019 ஆம் ஆண்டு முதல் எம்ஜி மோட்டார் பிராண்டில் முதல் கார் மற்றும் எஸ்யூவி மாடல்களை சீனாவை மையமாக கொண்டு செயல்படும் சாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்ட்ஸ்டிரி கார்ப்ரேஷன் (SAIC) குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற பிரிட்டிஷ் நாட்டின் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனா உள்பட இங்கிலாந்து போன்ற நாடுகளில் க்ராஸ்ஓவர் ரக கார்கள், செடான், ஹேட்ச்பேக், மின்சார கார்கள் மற்றும் எஸ்யூவிகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றது.

சமீபத்தில் ஜிஎம் செவர்லே நிறுவனத்தின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹலோல் ஆலையில் உற்பத்தி நிறுத்திக் கொண்டதால் இந்த ஆலையை செயிக் நிறுவனம் கையகப்படுத்தி இதன் வாயிலாக இந்தியாவில் மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஜிஎம் நிறுவனத்தின் சீனா கூட்டணி நிறுவனமாக எஸ்ஏஐசி குழுமம் செயல்படுகின்றது.

ஆரம்பகட்டமாக ரூ. 2000 கோடி வரை முதலீடு செய்ய உள்ள எஸ்ஏஐசி வாயிலாக மேலும் ஐந்து சீனாவின் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் இதே பகுதியில் சுமார் ரூ. 1000 கோடி வரை முதலீட்டை செய்ய உள்ளது.

எஸ்ஏஐசி குழுமம் மற்றும் குஜராத் மாநில அரசுக்கு இடையில் இந்த ஆலையில் முதலீடு செயவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியுள்ளது.

Exit mobile version