26 நிமிடத்தில் விற்பனையான ராயல் என்ஃபீல்டு டெஸ்பேட்ச் பைக்

0
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 புல்லட்டின் டெஸ்பேட்ச் ரைடர் பைக் வெறும் 26 நிமிடங்களில் 200 பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது. டெஸ்பேட்ச் பைக்குகள் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500

டெசர்ட் ஸ்ட்ரோம் மற்றும் ஸ்குவாட்ரான் புளூ என இரண்டு வண்ணங்கள் இந்தியாவிற்க்கும் மில்ட்டரி க்ரீன் வண்ணம் வெளிநாடுகளுக்கும் ஒதுக்கப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த முன்பதிவில் வெறும் 26 நிமிடங்களில் இந்தியவிற்க்கு ஒதுக்கப்பட்ட பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது.

ராயல் என்ஃபீலடு பைக்குகளின் விற்பனை கடந்த சில மாதங்களாக அபரிதமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. கடந்த காலாண்டில் 92,845 பைக்குகளை விற்பனை செய்து கடந்த 2014 காலாண்டை விட 44 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Google News

மேலும் மாதம் 32,000 பைக்குகளை தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு வரும் டிசம்பர் முதல் 55,000 பைக்குகள் தயாரிக்க உள்ளது. மேலும் ஹிமாலயன் என்ற பெயரில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரவுள்ளது.

Royal Enfield  Despatch Bikes Sold out within 26 minutes