6 புதிய பைக்குளை களமிறக்க ஹீரோ அதிரடி திட்டம்..!

இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 17-18 ஆம் நிதி ஆண்டில் 6 புதிய பைக் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்த ரூ.2500 கோடியிலான முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

ஹீரோ பைக்குகள்

ரூ. 2500 கோடி முதலீட்டில் புதிய மாடல்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஹீரோ நிறுவனம் இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் புதிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் போன்றவற்றை அறிமுகம் செய்ய உள்ளது.

ஜெய்ப்பூரில் ரூ.850 கோடி முதலீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ள சிஐடி (Centre of Innovation and Technology) மையத்தின் வாயிலாக உருவாக்கப்பட உள்ள இந்த மாடல்கள் ஹீரோவின் புதிய ஆலைகளான ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஹீரோ நிறுவனம் காட்சிப்படுத்தி எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மாடல் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில் இரு ஸ்கூட்டர் மாடல்களை 125சிசி மற்றும் 150சிசி பிரிவுகளில் விற்பனைக்கு வெளியிடலாம். இதுதவிர மேம்படுத்தப்பட்ட புதிய கரீஷ்மா பைக் உள்பட ஹீரோ ஹெச்எக்ஸ் 250 ஆர் போன்றவைகளும் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் ஆண்டுகளில் ஹீரோ நிறுவனம் பிரீமியம் ரக மோட்டார் சைக்கிள் சந்தையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Exit mobile version