பிஎம்டபிள்யூ G 310 பைக் உற்பத்தியில் சாதனை

பிஎம்டபிள்யூ G 310R மற்றும் பிஎம்டபிள்யூ G 310 GS பைக்குகள் இந்தியா உட்பட 90 நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலையில், முதன்முறையாக எண்ணிக்கையில் 50,000 உற்பத்தி இலக்கை கடந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு இணைந்து 500சிசி மற்றும் அதற்கு குறைந்த சிசி கொண்ட மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதன்படி பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட பிஎம்டபிள்யூ G 310R மற்றும் பிஎம்டபிள்யூ G 310 GS உற்பத்தியை ஓசூரில் அமைந்துள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் , டிசம்பர் 2016 முதல் மேற்கொண்டு வருகின்றது.

இந்திய சந்தையில் இரு பைக்குகளும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் சர்வதேச அளவில் பல்வேறு ஐரோப்பா நாடுகளில் கடந்த டிசம்பர் 2016 முதல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சர்வதேச அளவில் 90 நாடுகளில் இரு பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றது.

இரு பைக்கிலும் அதிகபட்சமாக 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் திரவத்தால் குளிர்விக்கப்படும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைத் திறன் 28Nm பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ G 310R ரூ. 2.99 லட்சம் (விற்பனையக விலை டெல்லி) மற்றும் பிஎம்டபிள்யூ G 310 GS ரூ. 3.49 லட்சம் (விற்பனையக விலை டெல்லி).

 

Exit mobile version