Home Auto Industry

1,00,000 பிஎஸ்6 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா

ஆக்டிவா 6ஜி

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முதன்முறையாக 1,00,000 பிஎஸ்6 என்ஜின் பெற்ற இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் ஆக்டிவா 125, எஸ்பி 125 மற்றும் ஆக்டிவா 6ஜி என மூன்று மாடல்களில் புதிய மாசு உமிழ்வுக்கு இணக்கமானதாக உள்ளது.

ஹோண்டா தனது புதிய பிஎஸ்6 என்ஜின் பெற்ற மாடல்களில் இஎஸ்பி எனப்படுகின்ற நுட்பத்தை கடைபடிக்கின்றது. இதன் மூலம் எஃப்ஐ என்ஜின், குறைந்த உராய்வு மற்றும் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்வதற்காக ஏசிஜி ஸ்டார்டர் வழங்கப்படுகின்றது.

ஆக்டிவா 125 எஃப்ஐ பல்வேறு புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 10.45 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 13 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாகும்.

ஹோண்டாவின் எஸ்பி 125 பைக்கில் 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஹோண்டா SP125 ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் டார்க் 10.9 என்எம் ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆக்டிவா 6ஜி மாடலில் புதிய வசதிகளுடன் ஃபயூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும்  5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 10 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி முதல் தனது அனைத்து இரு சக்கர வாகனங்களையும் பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக மட்டுமே உற்பத்தி செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் ஹோண்டா கிளிக் , நவி நீக்கப்படுகின்றது.

Exit mobile version