இனி ரூ. 10 லட்சத்துக்கு கார் வாங்கினால் கூடுதல் வரி செலுத்த வேண்டும்

0

புதிதாக கார் வாங்க விரும்புபவர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி செய்தியை மத்திய அரசு வழங்கி வரும் நிலையில், அடுத்ததாக ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு கூடுதல் விலையில் கார் வாங்குபவர்கள் ஜிஎஸ்டி வரி உட்பட கூடுதலாக டிசிஎஸ் வரியை செலுத்த வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Google News

சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி மற்றும் கூடுதல் செஸ் வரி என்பது உற்பத்தியாளரின் எக்ஸ்-ஷோரூம் விலைக்கு மட்டுமே ஆகும். ஆனால் மூல வருமானத்திற்கு அதாவது ரொக்க வரி அல்லது மூல வரி (tax collected at source TCS)  செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Indirect Taxes and Customs – CBIC ) வெளியிட்டுள்ள விபரம் ” வாங்குபவர் அளிப்பவருக்கு வழங்கப்படும் மதிப்பு, டிசிஎஸ் உள்ளடக்கியது என்பதால், ஜிஎஸ்டி-யின் நோக்கங்களுக்கான வரிக்குரிய மதிப்பு, வருமான வரிச் சட்டத்தின் விதிகளின் கீழ் சேகரிக்கப்பட்ட டிசிஎஸ் (tax collected at source) தொகையை உள்ளடக்குகிறது.

தற்போது நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற மின்சார கார்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகின்றது. மற்ற பயணிகள் வாகனங்களுக்கு 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மாடல்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி 1 சதவீதம் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி கார்களுக்கும், டீல் வாகனங்களுக்கு 3 சதவீதம் செஸ் வரி வசூலிக்கப்படுகின்றது. 4 மீட்டருக்கு அதிக நீளம் கொண்ட பயணிகள் வாகனங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி 15 சதவீதம் வசூலிக்கப்படுகின்றது.