Automobile Tamilan

ரூ.4,000 கோடி முதலீட்டில் களமிறங்கும் சீனாவின் சாங்கன் ஆட்டோமொபைல்

 Changan CS75

சீனாவை தலைமையிடமாக கொண்ட சாங்கன் ஆட்டோமொபைல் நிறுவனம், இந்தியாவில் ரூ.4,000 கோடி முதலீட்டை இந்திய சந்தையில் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. சீனாவின் மிக பழமையான சாங்கன் விற்பனை எண்ணிக்கையின் அடியில் சீனாவின் 4வது இடத்தினை பெற்றுள்ளது.

சாங்கன் நிறுவனம், சீன சந்தையில் ஃபோர்டு , சுசூகி மற்றும் பீஜோ சீட்ரோயன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. சீன சந்தையில் விலை மலிவான கார்கள் , செடான் மற்றும்  எஸ்யூவி போன்றவைகளை விற்பனை செய்து பிரபலமாக உள்ளது.  இந்நிறுவனம் படிப்படியாக நம் நாட்டில் 4000 கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. எனவே, சங்கன் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி, குருகிராமில் தங்கள் அலுவலகத்தை அமைத்துள்ளனர்.

ஆட்டோமொபைல் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள சஞ்சய்.ஜி அவர்களின் இந்திய நிபுணராக சாங்கன் நியமித்துள்ளது. சீன கார் தயாரிப்பாளர் இந்தியாவின் குரூப் லேண்ட்மார்க் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிறுவனம் ஆட்டோமொபைல் டீலர்ஷிப் மற்றும் காப்பீடு தொடர்பான விவகாரங்களை கையாள்கிறது.

சாங்கன் கார் தயாரிப்பாளர் தங்கள் முதல் தயாரிப்பை 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. ஆரம்பத்தில், சாங்கன் இந்தியாவில் இரண்டு புதிய எஸ்யூவி காருகளை வெளியிடலாம். முதல் எஸ்யூவி கார் கிரெட்டா மற்றும் செல்டோஸ் கார்களை எதிர்கொள்ள உள்ளது. இந்நிறுவனம், பயணிகள் வாகனம் மட்டுமல்லாமல் வர்த்தக வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது.

மற்றொரு சீன நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் நீண்ட காலமாக இந்திய சந்தையில் நுழைவதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்த நிலையில் இந்நிறுவனமும் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.7,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது.

உதவி – etauto

Exit mobile version