Home Auto Industry

அதிர்ச்சி.., FAME-II மானியத்தில் 3000 எலெக்ட்ரிக் டூ வீலர் மட்டும் விற்பனை

Ather 450 Electric Scooter

மத்திய அரசு மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிக்க FAME-II திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. குறிப்பாக ஃபேம் 1 திட்டத்தை விட ஃபேம் 2 பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு எலெக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள் ஃபேம் 2 மூலம் மானியத்தை பெற தவறியுள்ளனர்.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் பேட்டரி மூலம் இயக்கபடுகின்ற எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் விற்பனையில் சீரான வளர்ச்சி உள்ள போதும், விரைவாக மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தி அதிகரிக்க (FAME -II) மானியத்தை பெறும் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 94 % வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஃபேம் திட்டத்தில் குறைந்த ரேஞ்சு ஸ்கூட்டர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக FAME-I மூலம் 48,671 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், FAME-II மானியத்தின் மூலம் முதல் ஆறு மாதங்களில் மொத்தமாக 3,000 ஸ்கூட்டர்கள் மட்டும் சலுகை பெற்றுள்ளது. ஆனால் முதல் 6 மாதங்களுக்குள் 49,000 க்கு மேற்பட்ட குறைந்த வேகம் மற்றும் வரம்பு கொண்ட ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, மின்சார வாகனங்கள் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (Society of Manufacturers of Electric Vehicles-SMEV) குறிப்பிட்டுள்ளது.

புதிய ஃபேம் 2 ஆம் கட்ட நடைமுறையின் மூலம் அதிகபட்ச வேகம் 40 கிமீ ஆகவும் , சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 80 கிமீ ரேஞ்சு தரவல்லதாகவும், அதே நேரம் இரு சக்கர வாகன உற்பத்தியில் 50 சதவீத உதிரிபாகங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே, பெரும்பாலான குறைந்த ரேஞ்சு மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற உதிரிபாகங்களை கொண்ட வாகனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை.

இந்திய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் சராசரியாக மிக குறைவான ரேஞ்சு கொண்ட மாடல் ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை கிடைக்கின்றது. ஆனால், FAME-2 மானியத்தை பெறும் ஸ்கூட்டர்கள் பொதுவாக ரூ.80,000 முதல் தொடங்குகின்றது. உயர் வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி ஆயுள் நிறைவடைந்தால் புதிய பேட்டரிக்கு ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை செலவாகும்.

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் என்பது தற்பொழுது வரை ஆடம்பர விலை கொண்டதாகவே உள்ளது.

உதவி – ETAuto

Exit mobile version