Automobile Tamil

இந்தியாவில் ரூ. 7000 கோடி முதலீட்டை மேற்கொள்ளும் ஃபோர்டு மோட்டார்

Ford-Endeavour-front

இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ஃபோர்டு மோட்டார் நிறுவனம், $ 1 பில்லியன் அல்லது ரூ.7,000 கோடி முதலீட்டில் மூன்று புதிய எஸ்யூவி ரக மாடல்கள் மற்றும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்திய சந்தையில் இரு எஸ்யூவி கார்களுக்கு என ரூ.3,500 கோடி மற்றும் மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணியில் தயாரிக்கப்பட உள்ள சி பிரிவு எஸ்யூவி காருக்கு மீதமுள்ள ரூ.3500 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளதாக இடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபோர்டு மோட்டார் கம்பெனி

இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஃபோர்டு நிறுவனம் தனது பங்களிப்பினை அதிகரிக்க பல்வேறு புதிய மாடல்கள் மற்றும் வளர்ச்சிகான திட்டங்களை செயற்படுத்த உள்ளது. இதன் காரணமாக அடுத்த 5-7 வருடங்களுக்குள் 1 பில்லியன் அமெரிக்கா டாலர் முதலீட்டை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றது.

குறிப்பாக முதல் எஸ்யூவி ரக மாடல் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, வெனியூ உள்ளிட்ட காருக்கு போட்டியாக மிகவும் சவாலான விலையில் அமைந்திருக்கும். இந்த காருக்கான குறீயிடு பெயர் BX744 என அறியப்படுகின்றது. குறிப்பாக இந்த மாடல் இந்திய சந்தைக்கான பிரத்தியேகமான காராக விளங்கலாம்.

அடுத்த BX745 என்ற குறீயிடு பெயரில் தயாரிக்கப்பட உள்ள அடுத்த எஸ்யூவி மாடல் ஹூண்டாய் க்ரெட்டா போன்றவற்றுக்கு சவாலாக இந்தியா உட்பட வளரும் நாடுகளான சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

புராஜெக்ட் பிளாக் எனப்படும் மாடல் மஹிந்திரா மற்றும் ஃபோர்டு கூட்டணியில் உருவாக உள்ள எஸ்யூவி ரக மாடலாகும். இந்த காருக்கான முதலீடாக ரூ.3,500 கோடியை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த இந்நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலைகளான தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தியா உட்பட சர்வதேச அளவில் பல்வறு நாடுகளுக்கு ஏற்றுமதியை இந்தியாவிலிருந்து விரிவுப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஃபோர்டு நிறுவனம் பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் திட்டத்தையும் செயற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version