ஹீரோ ஸ்ப்ளெண்டர்: இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகனம்

2019-2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை சரிவில் பயணித்திருந்த நிலையில் நாட்டில் அதிகபட்சமாக ஹீரோ ஸ்பிளெண்டர் விற்பனை எண்ணிக்கை 26,32,800 பதிவு செய்து இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை 25,91,059 ஆக பதிவு செய்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகன எண்ணிக்கை, 1,74,17,616 பதிவு செய்துள்ளது. ஆனால் முந்தைய நிதியாண்டுன் ஒப்பீடுகையில் 17.8 சதவீத வீழ்ச்சியாகும். இதே காலகட்டத்தில் 2018-2019 நிதியாண்டில் மொத்தமாக பதிவு செய்த எண்ணிக்கை, 2,11,79,847 ஆகும்.

நாட்டில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் விற்பனை மிகவும் சரிந்தே காணப்படுகின்றது. அதே நேரத்தில் ஸ்கூட்டர் மற்றும் மொபட் வாகனங்களின் விற்பனையும் சரிவிலே உள்ளது.

ஹீரோ ஸ்ப்ளெண்டர்

2019-2020 ஆம் நிதியாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் பைக்குகள் மொத்தமாக 26,32,800 ஆக பதிவு செய்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா

FY2020 ஆம் ஆண்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை மொத்தமாக 25,91,059 ஆக பதிவு செய்துள்ளது.

Exit mobile version