Automobile Tamil

நற்செய்தி..! டிராக்டர் உதிரிபாகங்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பு..!

ஜிஎஸ்டி எனப்படும் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி நள்ளிரவு 12 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

டிராக்டர் உதிரிபாகங்கள் ஜிஎஸ்டி

சமீபத்தில் நமது தளத்திலும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் விவசாயிகளுக்கு பயன்படும் முக்கிய வாகனமான டிராக்டருக்கு 12 சதவிகித வரியும்,அதன் உதிபாகங்களுக்கு  28 சதவிகிதம் வரியும் விதிக்கப்பட்டதால் டிராக்டர்கள் விலை ரூ. 30,000 முதல்ரூ. 34,000 வரை அதிகரிக்கும் என தெரிவித்திருந்தோம்.

தற்போது இதற்கான வரிவிதிப்பு முறையில் மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

மேலும் டிராக்டர் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உரங்கள் மீது 12 சதவீத வரி விதிக்கப்பட்டதற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. வரி உயர்வு அதிகரிக்கப்பட்டால் விவசாய இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தால் விவசாயிகள்கூடுதல சுமையாகுவதுடன்  நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகும் என்று பல்வேறு விவசாய அமைப்புகள் மத்திய அரசிடம் முறையிட்டதை தொடர்ந்து வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version