FY19-ல் 78 லட்சம் பைக்குகளை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப்  ஸ்பிளென்டர்

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், FY2018-19 ஆம் நிதியாண்டில் மொத்தமாக 7,820,745 யூனிட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிறுவனத்தின் மாரச் 2019 மாதந்திர விற்பனையில் மொத்தமாக 581,279 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்துள்ளது. இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தை விற்பனை மிகப்பெரிய சவாலை கடந்த சில மாதங்களாக சந்தித்து வருகின்றது.

ஹீரோவின் பைக் விற்பனை நிலவரம்

நடந்து முடிந்த 2019 ஆம் நிதி வருடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், முதல் 200சிசி சந்தைக்கான பிரீமியம் ரக மாடலான எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கினை வெளியிட்டிருந்தது. மேலும் 125 சிசி சந்தையில் வெளியிடப்பட்ட ஹீரோ டெஸெட்டினி ஸ்கூட்டர் அமோக ஆதரவை பெற்றுள்ளது.

கடந்த நிதியாண்டில் நான்கு முறை 7 லட்சத்துக்கும் கூடுதலான மாதந்திர விற்பனையை ஹீரோ பதிவு செய்துள்ளது. மேலும் இரு சக்கர வாகன வரலாற்றில் மாதந்திர விற்பனையில் 7.50 லட்சம் வாகனங்களை கடந்த முதல் நிறுவனமாக உள்ளது. கடந்த செப்டம்பர் 2018-ல் 769,138 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் மாதங்களில் புதிய ஹீரோ பிளெஷர் ஸ்கூட்டர் , எக்ஸ்பல்ஸ் 200 மற்றும்  எக்ஸ்பல்ஸ் 200டி உட்பட பல்வேறு மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

Exit mobile version