புதிய சாதனையை படைத்த ஹீரோ மோட்டோகார்ப் – 7 லட்சம் பைக்குகள்

உலகின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் செப்டம்பர் மாத விற்பனையில் முதன்முறையாக 7,20,729 பைக்குகளை விற்பனை செய்து புதிய சாதனைய படைத்துள்ளது.

7 லட்சம் பைக்குகள்

தசரா மற்றும் ஒணம் பண்டிகை காலத்தில் மட்டும் இந்தியளவில் 1 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ள நிலையில், முதன்முறையாக மாதந்திர விற்பனையில் 7 லட்சம் அலகுகளை கடந்துள்ளது. மேலும் கடந்த 2016 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடுகையில் 6.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2016ல் மொத்தம் 6, 74,961 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்திருந்த நிலையில், இந்த வருடத்தின் செப்டம்பர் 2017ல் 7, 20,729 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து எந்த மோட்டார் பைக் தயாரிப்பாளரும் எட்ட இயலாத சாதனையை படைத்துள்ளது.

சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 75 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும். மேலும் வரவுள்ள தீபாவளி பண்டிகை காலம் நிச்சயமாக விற்பனையை கூடுதலாக அதிகரிக்கும் என்பதனால் நடப்பு அக்டோபர் மாத விற்பனையில் மற்றொரு சாதனையை படைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

Recommended For You