மீண்டும் ஹீரோ பைக் விற்பனையில் 7 லட்சம் கடந்தது

0

உலகில் அதிக மோட்டார்சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கடந்த மே மாத விற்பனை முடிவில்  மீண்டும் ஒருமுறை 7 லட்சம் இலக்கை கடந்த சுமார் 706,365 எண்ணிக்கையை பதிவு செய்து முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 11 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. தொடர்ந்து ஹீரோ நிறுவனம் இரு சக்கர வாகன சந்தையில் இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக விளங்குகின்றது.

ஹீரோ மோட்டோகார்ப்

நாட்டின் இருசக்கர வாகன விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் ஹீரோ மோடோகார்ப் நிறுவனம், நிறைவுற்ற மே மாதந்திர விற்பனையின் முடிவில் சுமார் 7,06,365 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 11 சதவீத வளர்ச்சி அதாவது கடந்த மே 2017யில் 6,33,884 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது.

Google News

இதுவரை இந்நிறுவனம் மூன்று முறை 7 லட்சம் எண்ணிக்கையை கடந்துள்ளது குறிப்பிடதக்கதாகும். கடந்த செப்டம்பர் 2017யில் 7,20,739 எண்ணிக்கை மற்றும் மார்ச் 2018யில் 730,473 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் காட்சிப்படுத்திய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் ஜூலை மாத தொடக்க வாரங்களில் விற்பனைக்கு கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அதனை தொடர்ந்து ஹீரோ டூயட் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.