Automobile Tamilan

பண்டிகை காலத்தில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை அதிகரிப்பு – அக்டோபர் 2019

Hero Splendor iSmart

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் அக்டோபர் மாதத்தில் இதுவரை எந்தவொரு மாதத்திலும் வழங்கப்படாத  அதிகபட்ச சில்லறை விற்பனையாக 12.84 லட்சம் எண்ணிக்கையில் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் அக்டோபரில் விற்பனை எண்ணிக்கை 599,248 யூனிட்டுகளை விற்றுள்ளது.

ஆனால், இந்நிறுவனம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 7.16 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில் 16.3 % வீழ்ச்சியாகும்.  125 சிசி ஸ்கூட்டர் சந்தையில் சிறப்பான பங்கைக் கொண்டுள்ளது. ஹீரோ தனது 125 சிசி ஸ்கூட்டர்களில் 50,000 சில்லறை விற்பனையை முதன்முறையாக கடந்துள்ளது. இந்த பண்டிகை காலங்களில் சில்லறை விற்பனையின் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவைகள் மற்றும் உதிரிபாகங்கள் பிரிவு தலைவர் சஞ்சய் பன் கூறுகையில், முதல் முறையாக வாங்குபவர்களால் வளர்ச்சியை அதகரித்துள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற சந்தைகள் பண்டிகை காலத்தில் சில்லறை வளர்ச்சியை 15 சதவீதத்தை கடந்துள்ளதாக அவர் விளக்கினார். இந்த காலகட்டத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனை இரட்டை இலக்கங்களில் அதிகரித்துள்ளது. ப்ளெஷர் பிளஸ் ஸ்கூட்டர் கணிசமான அளவு விற்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

200சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எக்ஸ்ட்ரீம் 200ஆர், எக்ஸ்ட்ரீம் 200எஸ், எக்ஸ்பல்ஸ் 200, மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி போன்ற மாடல்கள் அமோகமான வரவேற்பினை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version