எக்ஸ்குளூசிவ் டீலர்களை உருவாக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

0

Hero XPulse Concept Unveiled150 சிசி க்கு அதிகமாக எஞ்சின் பெற்ற இருசக்கர வாகனங்களுக்கு என பிரத்யேகமான டீலர்களை உருவாக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

எக்ஸ்குளூசிவ் டீலர்கள்

hero xtreme 200s auto expo 2016

Google News

150-சிசி திறனுக்கு அதிகமான எஞ்சின் பெற்ற ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு என பிரத்தியேகமான டீலர்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாக ஹீரோ தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார்.

இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் EICMA 2017 மோட்டார் வாகன கண்காட்சியில் எக்ஸ்பல்ஸ் என்ற ஆஃப் ரோடு மோட்டார் சைக்கிள் மாடல் ஒன்றை ஹீரோ நிறுவனம் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் அறிமுகத்தின் போது பேசிய பவன் முஞ்சால் கூறியதாவது ” நாங்கள் மிக தீவரமாக உயர் ரக எஞ்சின் பெற்ற இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 100 சிசி சந்தையில் உள்ள மாடல்களுக்கும் , அதிக திறன் பெற்ற மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் வித்தியாசமான அனுபவத்தை பெறும் நோக்கில் பிரிமியம் டீலர்களை உருவாக்க உள்ளோம். இந்த நிதி வருடத்திற்க்குள் 6 மாடல்களை அறிமுக செய்ய உள்ளோம், அவற்றில் 150 சிசிக்கு அதிகமான திறன் பெற்ற எஞ்சின் கொண்ட மாடல்களும் அடங்கியிருக்கும் ” என குறிப்பிட்டுள்ளார்

பிரீமியம் ரக பைக்குகள் மட்டுமல்லாமல் பிரிமியம் ரக ஸ்கூட்டர்களையும் உற்பத்தி செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

hero xtreme 200s 1

தற்போது நாடு முழுவதும் இந்நிறுவனம் 6000 க்கு அதிகமான டீலர் நெட்வொர்க்கை கொண்ட மாபெரும் இருசக்கர வாகன நிறுவனமாக ஹீரோ விளங்கி வருகின்றது.இந்த வருடத்தில் எக்ஸ்ட்ரீம் 200 எஸ், கிளாசிக் டிசைன் பெற்ற ஸ்கூட்டர், ஆகியவற்றுடன் மேலும் 4 மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.