ஹீரோ மோட்டோகார்ப் பைக்குகள் விலை உயருகின்றது

0

2018 Hero Super Splendor unveiledவருகின்ற ஜனவரி 1 , 2018 முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை ரூ.400 வரை விலை உயர்த்துவதாக ஹீரோ அறிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்

hero duet mastero edge

Google News

இந்தியாவின் பல்வேறு மோட்டார் கார் தயாரிப்பாளர்கள் ஜனவரி 1 முதல் விலை உயர்வை அதிகார்வப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், முதன்மையான மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ உயர்ந்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு விற்பனையில் உள்ள அனைத்து மாடல்களுக்கும் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.400 உயர்த்துவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

100-125 சிசி சந்தை உட்பட ஒட்டுமொத்த மோட்டார் சைக்கிள் சந்தையில் 50 சதவீத பங்களிப்பினை கொண்டதாக ஹீரோ விளங்கி வருகின்றது..

நேற்று இந்நிறுவனம் புத்தம் புதிய 125 சிசி எஞ்சின் பெற்ற சூப்பர் ஸ்பிளென்டர் , ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ மற்றும் ஹீரோ பேஸன் ப்ரோ ஆகிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல்களின் விலை விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

2018 Hero Passion Pro 2018 Hero Passion XPro 2018 Super Splendor