3.50 லட்சம் ஸ்கூட்டர்களை விற்ற ஹோண்டா டூவீலர் இந்தியா

0

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான இடத்தை பெற்ற விளங்கும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், மே மாதம் 2018 விற்பனையில் 551,601 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய வருடம் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 3 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. ஹோண்டா ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஹோண்டா டூவீலர் இந்தியா

ஹீரோ மற்றும் ஹோண்டா இந்தியா பிரிவுக்கு பின்னர் ஹோண்டா டூவீலர் நிறுவனம் , ஸ்கூட்டர் சந்தையில் 50 சதவீத பங்களிப்பினை பெற்று விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆக்டிவா 5ஜி, டியோ மற்றும் புதிய ஹோண்டா கிரேஸியா ஆகியவை பிரபலமாக விளங்குகின்றது.

உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தை என இரண்டிலும் ஹோண்டா மே 2018யில்  551,601 ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில்  537,035 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்தியாவில் 519,072 யூனிட்டுகள் மே 2018யிலும் , மே 2017யில்  510,381 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் அமோகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. குறிப்பாக மே 2017யில் 347,703 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை விட 2% வளர்ச்சி பெற்று மே 2018 மாதந்திர விற்பனையில் உள்நாடு மற்றும் ஏற்றுமதி என இரண்டிலும் 354,211 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

அதேபோல பைக் விற்பனையில் முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் விட 10 சதவீத வளர்ச்சி பெற்று 208,625 வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடதக்கதாகும். சமீபத்தில் 2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது