Site icon Automobile Tamil

28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்

ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிவுக்கு பின்னர் ஹோண்டா டூ வீலர் பிரிவு அமோகமான வளர்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த ஜூன் 2018 மாதந்திர விற்பனை முடிவில் 28 சதவீத வளர்ச்சி பெற்று மொத்தமாக 5,71,020 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்திய நிறுவனம், ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் விற்பனையில் தொடர்ந்து இந்தியளவில் முதலிடத்தில் விளங்கி வருகின்ற நிலையில் ஜூன் 2017யில் 4,44,528 யூனிட்டுகள் விற்பனை செய்திருந்த நிலையில் 28 சதவீத வளர்ச்சி பெற்று ஜூன் 2018யில் மொத்தமாக 5,71,020 யூனிட்டுகளை விற்றுள்ளது.

உள்நாட்டில் 5,35,494 இரு சக்கர வாகனங்களை கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்டு முந்தைய வருடம் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 4,16,365 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஸ்கூட்டர் விற்பனை ஓப்பீட்டு அளவில் 33 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. ஜூன் 2017 யில் 2,71,007 யூனிட்டுகளாக இருந்த விற்பனை 3,61,236 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டு (ஏப்ரல் -ஜூன் 2018) முடிவில் ஹோண்டா டூ வீலர் 18,04,537 யூனிட்டுகள் விற்பனை செய்து முந்தைய வருட காலாண்டின் முடிவை காட்டிலும் 16 சதவீத வளர்ச்சி (15,60,340) அடைந்துள்ளது.

மேலும் படிக்க – ஹோண்டா ஆக்டிவா 125 விற்பனைக்கு வந்தது

Exit mobile version