ஜனவரி 2020 முதல் ஹூண்டாய் கார்களின் விலை உயருகிறது

0

Hyundai Grand i10 Nios

2020 ஜனவரி மாதம் முதல் பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் விலை உயர்த்த உள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனமும் விலை உயரத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால், எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்பதனை தற்போது குறிப்பிடவில்லை.

Google News

மாருதி சுசுகி, கியா, மஹிந்திரா, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் ஜனவரி மாதத்திலிருந்தும் மற்ற நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களுக்கு விலை உயர்வினை அறிவிக்க உள்ளது. கார் நிறுவனங்கள் மட்டுமல்ல மோட்டார் சைக்கிள் தயாரிபாளர்களிஃ முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் ரூ.2,000 வரை தனது இரு சக்கர வாகனங்ளின் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

விலை உயர்வு தொகை குறித்த விவரங்களை ஹூண்டாய் வெளியிடவில்லை. இருப்பினும், உற்பத்தி மற்றும் மூலப் பொருள் செலவுகள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறியுள்ளது. விலை உயர்வு மாதிரிகள் மற்றும் எரிபொருள் வகைகளிலிருந்து மாறுபடும்.