3.8 % வீழ்ச்சி அடைந்த ஹூண்டாய் கார் விற்பனை நிலவரம் – அக்டோபர் 2019

0

hyundai santro

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் கார் நிறுவனத்தின் விற்பனை அக்டோபரில் 3.8 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் 52,001 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் ஹூண்டாய் வெனியூ சிறப்பான வரவேற்பினை தொடர்ந்து பெற்று வருகின்றது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி சுசுகி நிறுவனம், ரெனால்ட் என இரு நிறுவனங்களும் வளர்ச்சி பெற்றிருந்தாலும் பெரும்பாலான இரு க்கர வாகன நிறுவனங்கள் மற்றும் பயணிகள் வாகன விற்பனை நிறுவனங்களில் சரிவிலிருந்து மீளவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.

கடந்த 2018 அக்டோபரில் 52,001 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்த ஹூண்டாய் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 50,000 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 3.8 சதவீத வீழ்ச்சியாகும்.

குறிப்பாக இந்நிறுவனத்தின் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி மற்றும் கிரெட்டா என இரு மாடல்களும் யூட்டிலிட்டி சதையில் சிறப்பான பங்களிப்பை கொண்டுள்ளன.