Automobile Tamilan

செப்., 2019-யில் விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்

2019 Suzuki Access125 Color

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காலத்திலும் ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. செப்டம்பர் மாதந்திர விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை மொத்தமாக  13,93,256 கடந்துள்ளது. அதேவேளை கடந்த செப்டம்பரில் மட்டும் ஹோண்டாவின் ஆக்டிவா 2,48,939 யூனிட்டுகளை கடந்துள்ளது. அடுத்த இடத்தில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் 2,44,667 ஆக பதிவு செய்துள்ளது.

சுசுகி இரு சக்கர வாகன நிறுவனத்தை தவிர மற்ற அனைத்து இரு சக்கர வாகன தயாரிப்பாளரின் விற்பனை எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. இந்நிலையில் 10வது இடத்தில் சுசுகி ஆக்செஸ் 50,162 யூனிட்டுகளை கடந்துள்ளது.

விற்பனையில் டாப் 10 டூ வீலர்கள் – செப்டம்பர் 2019

வ.எண் தயாரிப்பாளர் ஆகஸ்ட் 2019
1. ஹோண்டா ஆக்டிவா 2,48,939
2. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,44,667
3. ஹீரோ HF டீலக்ஸ் 1,95,093
4. ஹோண்டா சிபி ஷைன் 88,893
5. டிவிஎஸ் ஜூபிடர் 69,049
6. பஜாஜ் பல்ஸர் 68,068
7. ஹீரோ கிளாமர் 62,016
8. டிவிஎஸ் XL சூப்பர் 57,321
9. பஜாஜ் சிடி 51,778
10. சுசூகி ஆக்செஸ் 50,162

Exit mobile version