இசுசூ கார்கள் விலை அதிகபட்சமாக 4 % உயருகின்றது

இசுசூ இந்தியா நிறுவனம் தங்களுடைய கார்கள் மற்றும் பிக்கப் டிரக்குகள் விலையை 3 முதல் 4 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜனவரி 1, 2018 முதல் விலை உயர்வு அமலுக்கு வருகின்றது.

இசுசூ கார்கள் விலை

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசுசூ மோட்டார்ஸ் நிறுவனம் எஸ்யூவி மற்றும் பிக்கப் விலையின் எக்ஸ்ஷோரூம் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.15,000 முதல் ரூ.1,00,000 வரை விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

விலை உயர்வு குறித்து இசுசூ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டீல் , காப்பர் மற்றும் அலுமினியம் ஆகிய உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விலையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இசுசூ இந்தியா நிறுவனம் இந்தியாவில் பிக்கப் டிரக்குகள் மற்றும் எஸ்யூவி ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது.

Recommended For You