Automobile Tamilan

ஜூலை 2019-யில் விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன்

கடந்த ஜூலை 2019 மாதந்திர விற்பனையில் இரு சக்கர வாகன சந்தையில் அதிகம் விற்பனையான டாப் 10 இரு சக்கர வாகனங்களை பற்றி தொடர்ந்து இங்கே அறிந்து கொள்ளலாம். இம்முறை முதலிடத்தில் உள்ள ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை 2,43,604 ஆக பதிவு செய்துள்ளது.

ஜூலை மாத விற்பனையில் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடுமையான விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், இரு சக்கர வாகன சந்தையைப் பொறுத்தவரை ஹீரோ நிறுவனம், கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 22.9 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. சுசூகி பைக் நிறுவனத்தின் விற்பனை 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மிகப் பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஜூலை மாதத்தில் 26.61 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் பிரபலமான கிளாசிக் 350 மாடல் விற்பனை எண்ணிக்கை முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில், 33 சதவீத வீழ்ச்சி அடைந்து 29,439 யூனிட்டுகள் மட்டுமே ஜூலை 2019-யில் விற்பனை ஆகியுள்ளது.

125சிசி சந்தையில் தொடர்ந்து ஹோண்டா சிபி ஷைன் முதலிடத்திலும், அதனை தொடர்ந்து ஹீரோ கிளாமர் பைக்கும் உள்ளது.

விற்பனையில் டாப் 10 டூ வீலர்கள் – ஜூலை 2019

வ.எண் தயாரிப்பாளர் ஜூலை 2019
1. ஹோண்டா ஆக்டிவா 2,43,604
2. ஹீரோ ஸ்பிளென்டர் 1,78,907
3. ஹீரோ HF டீலக்ஸ் 1,69,932
4. ஹோண்டா சிபி ஷைன் 94,559
5. ஹீரோ கிளாமர் 71,160
6. பஜாஜ் பல்ஸர் 62,469
7. டிவிஎஸ் ஜூபிடர் 57,743
8. பஜாஜ் பிளாட்டினா 52489
9. சுசூகி ஆக்செஸ் 51,498
10. டிவிஎஸ் XL சூப்பர் 51,198

 

Exit mobile version