மஹிந்திரா மற்றும் ஃபோர்டு வளரும் நாடுகளுக்கு கூட்டணி உருவானது

mahinda ford jv

மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஃபோர்டு பிராண்ட் வாகனங்களை அபிவிருத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்குவதற்கான உறுதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், ஃபோர்டு பிராண்ட் மற்றும் மஹிந்திரா பிராண்ட் வாகனங்கள் உலகளவில் அதிக வளர்ச்சியடைந்து வரும் சந்தைகளில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளன. இந்தியாவின் ஃபோர்டு நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுவனமும்,மீதமுள்ள 49 சதவீத பங்குகளை ஃபோர்டு இந்தியாவும் கொண்டு செயல்பட உள்ளது.

சனந்தில் அமைந்துள்ள ஃபோர்டு என்ஜின் ஆலையின் அனைத்து செயல்பாடுகளும் ஃபோர்டு நிறுவனம் மட்டுமே மேற்கொள்ள உள்ளது.

செப்டம்பர் 2017 இல் ஃபோர்டுக்கும் மஹிந்திராவிற்கும் இடையில் ஏற்பட்ட கூட்டணியின் அடுத்த கட்டமாக தற்போது இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளது. இது ஒழுங்குமுறை ஆனையத்தின் ஒப்புதல்களுக்கு பிறகு 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செயல்பட உள்ளது.

7 புதிய கார்களை உருவாக்கும் கூட்டணி

இந்த கூட்டணியின் மூலம் ஏழு புதிய மாடல்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஃபோர்டிலிருந்து மூன்று புதிய யூட்டிலிட்டி வாகனங்களை விற்பனை செய்ய உள்ளது. இதன் முதல் மாடலாக சி பிரிவு எஸ்யூவி விளங்கும். புதிய சி-எஸ்யூவி மஹிந்திராவால் உருவாக்கப்பட உள்ளது. மேலும், இது W601 என்ற குறீயிட்டு பெயரில் தயாரிக்கப்பட உள்ள, அடுத்த தலைமுறை XUV500 எஸ்யூவி மாடலாகும். W601 காருக்கான பிளாட்ஃபாரம் மஹிந்திரா, சாங்யாங் மற்றும் ஃபோர்டு இணைந்து உருவாக்க உள்ளது. இந்த எஸ்யூவி வாகனம் ஹூண்டாய் கிரெட்டாவுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஃபோர்டின் சி-எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் பிஎஸ் 6 டீசல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. ஃபோர்டின் பிராண்டில் வெளியாகும்போது முற்றிலும் மாறுபட்ட தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியர் உட்பட சேஸ் போன்றவற்றை கொண்டிருக்க உள்ளது.

மேலும், ஃபோர்டு அறிமுகம் செய்ய உள்ள மற்ற இரு கார்களின் விபரம் தற்பொழுது வெளியாகவில்லை. ஆனால் இரண்டு எஸ்யூவி மாடல்களும் முற்றிலும் ஃபோர்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ள B பிரிவு எஸ்யூவி ஆகும்.  பி-எஸ்யூவி என உள்நாட்டில் அறியப்பட்ட மாடல்  தற்போது உருவாக்கப்பட்டு வரும் சாங்யாங் டிவோலி (மஹிந்திராவின் எஸ் 201) அல்லது மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா போட்டியாளரை (குறியீட்டு பெயர்: பி 763) பயன்படுத்தும். ஃபோர்டு மற்றும் மஹிந்திரா / சாங்யோங் எஸ்யூவிகள் வெவ்வேறு வகையில் உருவாக்க உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களும் இந்த புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட உள்ளது. மஹிந்திரா முன்னரே உறுதிப்படுத்திய நிலையில், தற்போது ஃபோர்டு ஆஸ்பையர்  காரின் மஹிந்திரா பேட்ஜ் மூலம் செய்யப்பட்ட மின்சார காராக உற்பத்தி செய்ய உள்ளது. இந்த மாடல் 2021 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் தொடங்கி பவர் ட்ரெயின்களின் பகிர்வு இருக்கும். மேலும், இந்த 2020 ஆம் ஆண்டில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்டுக்கு பதிலாக மஹிந்திராவின் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக வரவுள்ளது.

ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் ஆசியான் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்கள் உட்பட 100 க்கு மேற்பட்ட உயர் வளரும் சந்தைகளில் இரு நிறுவனங்களின் கார்களும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

Exit mobile version