மஹிந்திரா , ஃபோர்டு கூட்டணியில் இரண்டு புதிய எஸ்யூவிகள்

0

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளர் மஹிந்திரா மற்றும் அமெரிக்காவின் ஃபோர்டு இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியா உட்பட வளரும் நாடுகளுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஃபோர்டு – மஹிந்திரா எஸ்யூவி

முதன்முறையாக 1995 ஆம் ஆண்டு ஃபோர்டு மற்றும் மஹிந்திரா இரு நிறுவனங்களும் கூட்டணி அமைத்து எஸ்கார்ட் செடான் கார் உட்பட ஐகான் மற்றும் மான்டியோ ஆகிய மாடல்களை வெளியிட்டிருந்த நிலையில், இரு கூட்டணி நிறுவனங்களும் பிறகு தனியாக பிரிந்து செய்ல்பட தொடங்கிய நிலையில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் உருவெடுத்தது. தற்போது மீண்டும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒரு காம்பேக்ட் எஸ்யூவி உட்பட மின்சார எஸ்யூவி மாடல் என மொத்தம் இரு மாடல்களை வெளியிட்டுள்ளது.

Google News

அமெரிக்காவின் முன்னணி ஆட்டோ நிறுவனமும், இந்தியாவின் எஸ்யூவி ராஜாவாக விளங்கும் இரு நிறுவனங்களும் இணைந்து அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை வடிவமைக்கும் பணிகளை இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள உள்ளது.  இந்த எஸ்யூவி மாடல் ஃபோர்டு நிறுவனத்தின் பெயரில் ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு என்டேவர் ஆகிய இரு மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

மேலும் அடுத்த மாடலாக விளங்க உள்ள எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் மஹிந்திரா இவி நிறுவனத்தின் பவர்டெரியின் கொண்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்பயர் செடான் ரக மாடலை பினபற்றி வடிவமைக்கப்பட உள்ள காம்பேக்ட் எஸ்யூவி மாடல் க்ரெட்டா எஸ்யூவிக்கு எதிராக விளங்கும் என கூறப்படுகின்றது.

இரு நிறுவனங்களும் மேற்கொண்டுள்ள மூன்று ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் குறைந்த விலையில் சிறந்த நுட்பங்களை உருவாக்கும் திறனை ஃபோர்டு பெறுவதுடன், ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து மஹிந்திரா சிறந்த என்ஜினியரிங் நுட்பங்களை பெறுவதற்காக கையெழுத்திட்டுள்ளது.  மேலும் ஃபோர்டு நிறுவனத்தின் ஆதரவை மஹிந்திரா வளரும் நாடுகளில் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

இரு நிறுவனங்களின் கூட்டணியில் முதல் எஸ்யூவி மாடல் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.