மஹிந்திரா ஜென்ஸீ மின்சார ஸ்கூட்டர் வருகை விபரம்

0

2016 Mahindra GenZe 2.0கலிஃபோர்னியாவில் உள்ள மஹிந்திரா ஜென்ஸீ நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் மாடல் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஜென்ஸீ மின்சார ஸ்கூட்டர்

மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் ஜென்ஸீ மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின்சார சைக்கிள் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான இந்நிறுவனத்தின் ஜென்ஸீ 2.0 மற்றும் ஜென்ஸீ 2.0S ஆகிய இரு மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக மஹிந்திரா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

GenZe என்பதன் விளக்கம் Generation Zero Emissions ஆகும்

முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஜென்ஸீ 2.0 ஸ்கூட்டரில் நீக்கும் வகையிலான 1.6 kWh லித்தியம் ஐன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மற்றொரு ஜென்ஸீ 2.0 எஸ் மாடலில் தோற்ற அமைப்பில் சில மாற்றங்களை பெற்றிருப்பதுடன் டிராக்கிங் கருவிகளை பெற்றதாக விற்பனை செய்யப்பட உள்ளது. மணிக்கு 48 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்ற இந்த ஸ்கூட்டரின் மின்கலன் முழுமையான சார்ஜ் ஏறுவதற்கு அதிகபட்சமாக 3.5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற மஹிந்திரா ஜென்ஸீ 2.0 மாடலுக்கு எதிராக டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர், ஹீரோ மின்சார ஸ்கூட்டர் மற்றும் ஏதர் எஸ்340 ஆகியவற்றை எதிர்கொள்ளும்.