Automobile Tamilan

விற்பனை செய்யப்படாமல் 18 ஆயிரம் பி எஸ் 3 வாகனங்களை மஹிந்திரா வசம் உள்ளது.

உச்சநீதிமன்ற அதிரடி தீர்ப்பை தொடர்ந்து மார்ச் மாத இறுதி தினங்களில் பரபரப்பாக இயங்கி ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் 18 ஆயிரம் பி எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக பங்கு சந்தையில் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா பி எஸ் 3 வாகனங்கள்

ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 30 மற்றும் 31ந் தேதி இந்தியா வாகன சந்தையில் எண்ணற்ற சிறப்பு விலை சலுகைகளை வாகன நிறுவனங்கள் வாரி வழங்கிய பொழுதும் விற்பனை செய்யப்பாடமல் உள்ள பி.எஸ் 3 வாகனங்களின் இருப்பு விபரங்களை மோட்டார் நிறுவனங்கள் வெளியிட தொடங்கியுள்ளது. அந்த வகையில் மஹிந்திரா & மஹிந்திரா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வரத்தக வாகனங்கள் வரை பி.எஸ்3 மாசு விதிகளுக்கு உட்பட்ட எஞ்சின் பொருத்திய மாடல்களை 18,000 வரை இருப்பில் உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வாகனங்களில் சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , மேலும் சிலவற்றை பி.எஸ் 4 முறைக்கு மாற்ற உள்ளதாக மகேந்திரா தெரிவித்துள்ளது.

பி.எஸ் 4 நடைமுறையை அமலுக்கு வந்ததை ஒட்டி வர்த்தக வாகனங்கள் 6 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை விலை உயர்வினை பெறுவதனால் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் ரூபாய் 3,000 முதல் ரூபாய் 4000 வரை பெரும்பாலான மாடல்கள் விலை உயர்வினை சந்தித்துள்ளது. அதிகபட்சமாக கனரக வாகனங்கள் ரூபாய் 2 லட்சம் வரை விலை உயர்ந்துள்ளதாக மகேந்திரா தகவல் வெளியிட்டுள்ளது.

Exit mobile version