Automobile Tamilan

மஹிந்திரா வாகனங்கள் விலை ரூ.5000 முதல் ரூ.73,000 வரை உயருகின்றது

மஹிந்திரா வாகனங்கள் விலை

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், தனது கார் முதல் டிரக்குகள் வரை விலையை ரூ. 5000 முதல் அதிகபட்சமாக ரூ. 73,000 வரை உயர்த்துகின்றது.

இதுகுறித்து மஹிந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் வாகன தயாரிப்பு மூலப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக குறிப்பிட்டுள்ளது.

மஹிந்திரா எஸ்யூவி விலை உயர்வு

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாக தனது அனைத்து பயணிகள் மற்றும் வர்த்தக வாகனகள் விலையை ஏப்ரல் 1 முதல் 0.5 சதவீதம் முதல் 2.7 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக மஹிந்திரா நிறுவன வாகனங்கள் விலை ரூபாய் 5000 முதல் ரூபாய் 73,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளது. ஆனால் புதிதாக விற்பனைக்கு வந்த எக்ஸ்யூவி300 விலை உயர்த்தப்படுமா என்பதனை தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.

மஹிந்திரா ஆட்டோமொபைல் துறை தலைவர் ராஜன் வதேரா கூறுகையில்,  “இந்த ஆண்டு
மூலப்பொருகளின் விலை அதிகரித்திருக்கின்றது. மேலும் எமது செலவினங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், விலை உயர்வினை தவிர்க்க இயலவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் , தனது கார்களின் விலை அதிகபட்சமாக ரூ.25,000 வரை உயரத்துவதாக அறிவித்திருந்தது.

Exit mobile version