எலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300

வருகின்ற 2020 ஆம் ஆண்டில் மின்சாரத்தில் செயல்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலுக்கான பேட்டரியை கொரியாவின் LG Chem நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பயணிகள் வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் சர்வதேச அளவில் வழங்கப்பட்டு வரும் நிலையில் மஹிந்திரா நிறுவனம் உயர் ரக சக்திவாய்ந்த எஸ்யூவி மாடலை S210 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடலின் அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் மாடலை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

எலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி300

தற்போது, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மின்சார கார் உற்பத்தி மேற்கொள்ளபடவில்லை என்றாலும், தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் சார்ந்த கார்க்கை தயாரிப்பதில் மிக தீவரமாக ஈடுபட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் மின்சார கார்கள் பயன்பாட்டிற்கு வரும்போது மஹிந்திரா விற்பனையில் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிறுவனத்திற்கு என பிரத்தியேகமாக உயர் தரத்திலான மின் ஆற்றலை சேமிக்க என இந்திய சாலைகளுக்கு ஏற்ற லித்தியம் ஐயன் பேட்டரியை LG Chem என்ற கொரியா நிறுவனத்திடம் மஹிந்திரா ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்தியாவில் ரூ.7.90 லட்சம் தொடக்க விலையில் மஹிந்திரா XUV300 விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 படங்கள்